‘என் கோட்டையை பிரிக்காதீங்க’… தலைமைக்கு செக் வைக்கும் சீனியர் மா.செ.க்கள்… ஸ்டாலின் கையில் எடுத்த புதிய ஆயுதம்… அதிரும் அறிவாலயம்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

திமுகவில் தற்போதுள்ள 78 கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கையை 125-ஆக உயர்த்தி, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க கட்சித் தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, இந்த புதிய பொறுப்புகளில் பட்டியல் சமூகத்தினர், பெண்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்காத சிறுபான்மைச் சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கி, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த தலைமை விரும்புகிறது.

இருப்பினும், இந்த அதிரடி மாற்றத்தால் தங்களது செல்வாக்கும், அரசியல் அதிகாரமும் கைநழுவிப் போய்விடுமோ என்று தற்போதைய மூத்த தலைவர்கள் மற்றும் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் கடும் கவலையடைந்துள்ளனர். இதன் காரணமாக, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களைப் பிரிக்கக் கூடாது என அவர்கள் கட்சித் தலைமைக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டு வருவதால், அறிவாலய வட்டாரத்தில் தற்போதைய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.