கட்சிக்குள் காமக்கொடூரர்களை வச்சுக்கிட்டு “தூய சக்தி”னு மார்தட்டலாமா..? “zero tolerance”னு சொல்ல வாய் கூசலையா..? முதல்வரை கிழித்தெடுத்த நயினார் நாகேந்திரன்…!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

கணவனை இழந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சீர்குலைந்து வருவதை சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியினரின் இத்தகைய அத்துமீறல்களுக்குத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

“Zero tolerance-ஆ? இல்லை, Zero Control-ஆ முதல்வரே” என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், ஒருபுறம் தவெகவினர் ஆளுங்கட்சி திமிரில் பெண்கள் பாதுகாப்பைக் காவு வாங்கி வருவதாகவும், மறுபுறம் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் அதிகார மமதையில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இப்படி ஒட்டுமொத்தமாகப் பெண்கள் பாதுகாப்பைச் சீரழிக்கும் கும்பலைக் கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு “zero tolerance”-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா? என்று சாடியுள்ளார்.

   

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், தங்களைத் “தூய சக்தி” என்று மார் தட்டிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மேலும், மேடைகளில் பேசுவதை விடுத்து, முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து மாநிலத்தில் உள்ள மகளிரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.