“அப்போ அணில்.. இப்போ பியூஸ் கேரியர் திருட்டு” விசித்திரக் காரணங்களைச் சொல்லி மக்களைத் தவிக்க விடுவதா..? தவெக அரசை வறுத்தெடுத்த இபிஎஸ்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின் தடை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கோடைக் காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து திட்டமிடாததால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரவில் மக்கள் தூங்க முடியாமலும், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பம்ப் செட்டுகள் இயங்க முடியாமலும் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2026-27 நிதியாண்டில் தமிழகத்தின் மின் தேவை 23,013 மெகாவாட் வரை உயரும் என மத்திய மின்சார ஆணையம் கணித்திருந்தும் அரசு போதிய உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மின் தடைப் பிரச்சினைக்கு மின்சாரத் துறை அமைச்சர் ‘பியூஸ் கேரியர் திருட்டு’ என்று விளக்கம் அளித்திருப்பதை எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் எப்படி பியூஸ் கேரியர்கள் திருடு போகும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், கடந்த திமுக ஆட்சியில் மின் தடைக்கு ‘அணில்கள்’ காரணம் என்று சொன்னார்கள், இப்போது ‘பியூஸ் கேரியர்’ என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள் எனச் சாடியுள்ளார். இதுபோன்ற விசித்திரமான காரணங்களைத் தேடி நேரத்தை வீணடிக்காமல், மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.