உஷார் மக்களே..! தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கப்போகுது… இதுல உங்க ஏரியா இருக்கா..?

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று நீலகிரி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப் பிரதேசங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய இடங்களிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ள அதே வேளையில், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.