மீண்டும் பதற்றம்.! அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்… கோபத்தில் கொந்தளித்த அதிபர் டிரம்ப்..!!

By Soundarya on ஆனி 10, 2026

Spread the love

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே, ஓமன் கடற்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் ‘AH-64 அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய பிறகு, அமெரிக்கா தனது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விபத்து இயந்திரக் கோளாறு காரணமாக நடந்ததா அல்லது ஈரானிய படைகளால் இந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான காரணங்கள் இன்னும் வெளியாகாமல் குழப்பம் நீடித்து வருகிறது.

   

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கும் நோக்கில், அந்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது வான்வெளி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் இந்த விபத்து நிகழ்ந்திருந்தாலும், ஈரானுடன் மிக விரைவில் ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படும் என்று அதிபர் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.