நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ஆர்டரின் பெயரில் கேக் விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமலா தம்பதிகளின் மகன் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.’சங்கிலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

Actor Prabhu at M Ramanathan Daughter Marriage Photos
தற்பொழுது ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் பிரபு நடித்துள்ளார். நடிகர் பிரபுவிற்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார்.
2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ஆர்டரின் பெயரில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நிறுவனத்தின் பெயர் ‘மெல்ட்ஸ் டெசர்ட்’ என்பதாகும். இதற்காக அவர் தான் தயாரித்த அழகான கேக்கின் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் பிறந்தநாள் மற்றும் அனைத்து நல்ல நிகழ்ச்சிகளுக்கும் தானே கேக் செய்து தயாரித்து கொடுத்து வருகிறார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

