தமிழக மக்களே… “இனி ஆபீஸ் ஆபீஸா அலையாதீங்க”…. மொத்த பிரச்சனைக்கும் ஒத்த தீர்வு… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே நோட் பண்ணுங்க….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் மிக எளிதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவான தீர்வுகளைப் பெறுவதற்காகப் பல்வேறு முக்கியத் துறைவாரியான மின்னஞ்சல் (E-mail) முகவரிகளையும், பிரத்யேக உதவி மையத்தையும் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான பொதுவான புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிப்பதற்காக “முதலமைச்சர் உதவி மையம்” உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 1100 என்ற இலவசத் தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது cmhelpline@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இதற்கென பிரத்யேகமாக இயங்கி வரும் http://cmhelpline.tnega.org என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்து பயனடையலாம்.

ஒட்டுமொத்த நிர்வாகப் புகார்களுக்குத் தலைமைச் செயலாளரை (cs@tn.gov.in) தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையில், பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தனித்தனி மின்னஞ்சல் முகவரிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, குடிநீர் மற்றும் மாநகராட்சிப் பிரச்சினைகளுக்கு mawssec@tn.gov.in என்ற முகவரியிலும், பட்டா மற்றும் தாசில்தார் அலுவலகப் பிரச்சினைகளுக்கு revsec@tn.gov.in முகவரியிலும், மின்சாரம் சார்ந்த குறைகளுக்கு enersec@tn.gov.in முகவரியிலும் புகாரளிக்கலாம். இதுதவிர, சட்டம் ஒழுங்கு (homesec@tn.gov.in), ரேஷன் கடை (coopsec@tn.gov.in), அரசு மருத்துவம் (hfsec@tn.gov.in), சாலை மற்றும் பாலங்கள் (pwdsec@tn.gov.in), கிராமப் பஞ்சாயத்து (ruralsec@tn.gov.in), பள்ளி மற்றும் உயர்கல்வி (schsec@tn.gov.in / hrsec@tn.gov.in), போக்குவரத்து (transec@tn.gov.in), விவசாயம் (agrisec@tn.gov.in), சமூக நலம் (swsec@tn.gov.in), சுற்றுச்சூழல்/காடுகள் (forsec@tn.gov.in) மற்றும் தொழிலாளர் நலன் (labsec@tn.gov.in) ஆகிய துறைகளுக்கும் தனித்தனியே மின்னஞ்சல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த பிரச்சினைகளை இந்த அதிகாரப்பூர்வ முகவரிகளுக்கு அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளுக்கு மிக விரைவில் உரிய தீர்வுகளைப் பெற முடியும்.