அழகு, காதல், ஆடம்பரம் மற்றும் நிதிக்கு அதிபதியான சுக்கிரன் நீர் ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு பொன்னான காலம் ஆரம்பமாகிறது. இவர்களுக்கு பண வரவு கணிசமாக அதிகரிப்பதுடன், செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்; உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், திருமணமான தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதலும் சமாதானமும் ஏற்படுவதுடன், இவர்களின் இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும்.
இந்த பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கும் பெரும் அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. இவர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் பிறப்பதுடன், பல்வேறு ஆதாரங்களில் இருந்து பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். சுற்றியிருப்பவர்கள் மூலம் நல்ல ஆதாயமும், சமுதாயத்தில் அந்தஸ்தும் உயரும். மொத்தத்தில் கன்னி ராசியினருக்கு நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பொன்னான காலமாக இது அமையவுள்ளது.
துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை மற்றும் தொழிலில் இப்பெயர்ச்சி ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும். சுக்கிரன் 10-ம் வீடான கர்ம ஸ்தானத்திற்குச் செல்வதால், வேலை தேடுபவர்களுக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உருவாகும். சுக்கிரனின் இந்த மாற்றங்களால் திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைந்து சுபகாரியத் தடைகள் நீங்கும்; கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். மேலும், நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், பிள்ளைகளால் பெருமையும் பூர்வீக சொத்துக்களால் லாபமும் உண்டாகும்.
