BREAKING: வீட்டு சிலிண்டர்… இரவோடு இரவாக வந்த அதிர்ச்சி செய்தி..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தலா ₹300 மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த மானிய உதவி, தற்பொழுது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனப் பெட்ரோலியத் துறையின் கூடுதல் செயலாளர் பிரவீன் மல் கனூஜா தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) விநியோகச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிப் பளுவைக் கட்டுப்படுத்தவும், உஜ்வாலா பயனாளர்களின் சராசரி ஆண்டுப் பயன்பாட்டு அளவோடு (4 முதல் 5 சிலிண்டர்கள்) மானியத்தை ஒத்திசைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்கள் தங்களின் முதல் 4 சிலிண்டர் ரீஃபில்களுக்கு மட்டுமே ₹300 மானியத்தைப் பெற முடியும், அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலைக்கே வாங்க வேண்டும்