EPS போட்ட மெகா ஸ்கெட்ச்…. TVK-வுக்கு செக் வைக்க அதிமுக எடுத்த அதிரடி முடிவு… இடைத்தேர்தல் களத்தில் வெடிக்கப்போகும் புதிய கூட்டணி குண்டு…!

By Nanthini on ஆனி 8, 2026

Spread the love

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் களம் காண பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், இதில் பெறப்போகும் வெற்றி கட்சியின் பலத்தை நிரூபிப்பதோடு மட்டுமின்றி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அரசுக்கு பெரும் அரசியல் அழுத்தத்தைக் கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) வலுவாக நம்புகிறார்.

இதன் காரணமாக, எதிர்த்து நிற்கும் ஆளுங்கூட்டணியை பலமான கூட்டணியுடன் எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) மதுராந்தகம் தொகுதியையும், பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) அம்பாசமுத்திரம் தொகுதியையும் ஒதுக்கி, தங்களது பலத்தை இருமடங்காக உயர்த்தி இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமை ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பரவலான தகவல்கள் கசிந்து வருகின்றன.