“பொய்யான வாக்குறுதி… கவர்ச்சி அரசியல்..!” தவெக-வை வம்புக்கு இழுத்த மேயர் பிரியா.. வைரலாகும் பின்னணி…!!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், நடிகர் விஜய் தலைமையிலான ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசை மிகக் கடுமையாக சாடினார். “இன்று கவர்ச்சியான பேச்சுகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அவர்கள் யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். தாங்கள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறோம் என்ற பொறுப்பு கூட தெரியாமல், இன்னும் எதற்கெடுத்தாலும் திமுகவையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்?” என்று மேயர் பிரியா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

   

மேலும், திமுகவின் முந்தைய ஆட்சிக்கால சாதனைகளையும், தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், கடந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, மிகக் கடுமையான கொரோனா காலகட்டமாக இருந்ததைக் குறிப்பிட்டார். அந்த இக்கட்டான சூழலில் கூட, உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவமனைக்கு நேரில் சென்று, நோயாளிகளைச் சந்தித்து பொறுப்புடன் கடமையாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்றும், மக்களுக்கான உண்மையான சேவை எது என்பதை திமுக அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது என்றும் மேயர் பிரியா தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.