பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத் தாயைக் கத்தியால் குத்திவிட்டு, ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் பயங்கர சம்பவம் சனிக்கிழமை அன்று அரங்கேறியுள்ளது. பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘ராதா ஸ்கை கார்டன்’ சொசைட்டியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இறந்துபோன வாலிபர் சாகர் யாதவ் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சாகர் யாதவிற்கும் அவரது தாயாருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாகர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது தாயாரைக் கொடூரமாகக் குத்திப் படுகாயப்படுத்தியுள்ளார். பின்னர், அடுத்த சில நொடிகளில் அதே வேகத்தில் ஓடிச் சென்று 5-வது மாடி பிளாட்டின் பால்கனியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

   

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சாகர் யாதவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த அவரது தாயாருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாகர் யாதவ் கடந்த சில காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.