தமிழக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் இன்று TVK கட்சியில் இணைய உள்ளதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிய தகவல்களுக்கு அவர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தான் TVK-வில் இணைந்ததாகத் தன்னைப்பற்றி தவறான தகவல் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்குத் தனது கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி மாதா கோயிலில் வழிபாடு செய்தபோது எடுத்த புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு, இத்தகவலை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
