தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் (HC) அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. கல்வி கட்டணம் என்பது மறைமுகமாக வைக்க வேண்டிய கருப்பு பணம் அல்ல என்பதால், அதனை வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முக்கிய உத்தரவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பள்ளிகள் தங்களின் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் சேர்க்கைக்கு முன்பே சரியான முடிவை எடுக்க முடியும்.
மேலும், இந்த அதிரடி உத்தரவின் மூலம் தனியார் பள்ளிகள் கூடுதலாக அல்லது சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது
