“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத் தலாட்டமாய் அலைந்து பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், அங்குள்ள அரசு அதிகாரிகளோ மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில், தண்ணீர்ப் தட்டுப்பாடு காரணமாகப் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் நேரடியாக அரசு அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளை அதிரடியாகத் தட்டிகேட்டுள்ளார்.

அங்கு பணியில் இருந்த எஸ்டிஎம் (SDM) எனப்படும் துணை மாவட்ட ஆட்சியருடன் அந்தப் பெண் “தண்ணீர் தர முடியாவிட்டால் நாற்காலியை விட்டு இறங்குங்கள்” என நேருக்கு நேர் ஆவேசமாக வாதாடியுள்ளார். “இந்தூரின் சிங்கப் பெண்” என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டப்படும் இவரைப் போல, நாட்டின் எந்தவொரு மக்கள் பிரச்சினையாக இருந்தாலும் நமது நாட்டின் இளைஞர்கள் தங்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் முன்வந்து போராட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. தன் முன்னே நிற்பவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், நியாயத்திற்காகத் தட்டிக்கேட்கும் இளைஞர்களின் இந்த எழுச்சிதான் மாற்றத்திற்கான தொடக்கம் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.