அட பாவிங்களா.. பார்சல் வாங்க வருமாறு வரவழைத்து கொலை.. 15 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து காதலியின் தந்தை.. உ.பி.யில் பரபரப்பு..!!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தின் சௌரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேத்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பிந்து தீவர். இவன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், ஒரு பார்சலை வாங்க வருமாறு கூறி அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பிந்துவை வீட்டை விட்டு வெளியே அழைத்துள்ளனர். அவன் வந்தவுடன், பெண்ணின் தந்தை உட்பட நான்கு பேர் பிந்துவைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவனுக்குக் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். வழியில் மயங்கிக் கிடந்த அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்தக் கொடூரக் கொலையால் ஆத்திரமடைந்த சிறுவனின் குடும்பத்தினரும், நூற்றுக்கணக்கான கிராம மக்களும் பதோஹி-வாரணாசி சாலையில் பிந்துவின் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் சட்டவிரோதக் கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதிநாத் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

சம்பவ இடத்திற்கு வந்த எஸ்டிஎம் அருண் கிரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாகப் பெண்ணின் தந்தையான அசோக் மௌரியா என்ற முதன்மைக் குற்றவாளியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணையும் பெண் காவலர்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்டக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.