பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகம்….

By Begam on புரட்டாதி 21, 2022

Spread the love

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொது உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.

பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். பின்னர் ஹிந்தி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பின்னர் பிக் பிரதர் படத்தில் காமெடியனாக நடித்தார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றுள்ளார்.

   

   

58 வயதான பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா ஜிம்மில்  உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். இதை எடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு முறை சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

 

சிகிச்சைகளுக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் எய்ட்ஸ் மருத்துவமனை தெரிவித்திருந்தது.  ராஜூ ஸ்ரீவஸ்தவா நலமுடன் இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மீண்டும் திரும்ப வந்து அவர் காமெடியில் கலக்குவார் என்றும் அவரது நண்பர் சுனில் பால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்  தற்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் ராஜூ ஸ்ரீவஸ்தவா குடும்பத்திற்கு திரைத்துறையை சேர்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து திரையுலகமே கவலையில் ஆழ்ந்துள்ளது.