அடடே.. பிரபல காமெடி நடிகர் கருணானாஸின் மகளா இவர்….இவளோ பெரிய மகள் உங்களுக்கு இருக்காங்களா?…ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…

By Begam on புரட்டாதி 21, 2022

Spread the love

தற்பொழுது நடிகர் கருணாஸ் தன்னுடைய மனைவி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கருணாஸ் தன்னுடைய இயல்பான கிராமத்து நடை பேசும் காமெடியால் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் முதலில் காமெடியனாக நடிக்கவில்லை. தஞ்சாவூர் திருவாடணையில் இருந்து சென்னை வந்த கருணாஸ் நந்தனம் கல்லூரியில் டிகிரி படித்துள்ளார். அங்கு படிக்கும்போது நாட்டுப்புறப்பாடல்களின் மீது ஆர்வமாக இருந்து அதனை கற்றுக் கொண்டார்.

   

   

பின்னர் சினிமாவில் சில பாடல்களும் பாடினார் ஒரு கல்லூரியின் விழாவில் பாடச் சென்றிருந்தபோது ‘கிரேஸ்’ என்னும் நாட்டுப்புறப் பாடகியுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரேஸ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார்.

 

இவர்களுக்கு ‘கேன்’ எனும் மகனும்  ‘டயானா’ எனும் மகளும் உள்ளார்கள். இவரது மகன் கேன் கருணாஸ் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

இப்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் கருணாஸின் மகன். தற்பொழுது கருணாஸ் அவரது மனைவி மகள் மற்றும் மகனும் இருக்கும்படியான குடும்ப புகைப்படம்  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ‘கருணாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.