மாதம் வங்கி கணக்கில் ரூ.1000… புதிதாக விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 29, 2026

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் மாதம் ₹1,000 வரை உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ₹400 மற்றும் பட்டதாரிகளுக்கு ₹600 வீதமும், மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பிற்கு ₹600, பிளஸ்-2-விற்கு ₹750 மற்றும் பட்டப்படிப்பிற்கு ₹1,000 வரையிலும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு அட்டை (Employment Card), மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), குடும்ப அட்டை, அடையாளச் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் நேரில் சென்று தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.