FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக செல்வேந்திரன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலும், இந்த விதிமீறல் அங்கு நடந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளரை அதிரடியாகக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.