போலீஸை பார்த்ததும் கடலில் வீசப்பட்ட மூட்டைகள்… துரத்திப் பிடித்த கடலோர காவல் படை.. ரூ.1,150 கோடி கொக்கைன் பறிமுதல்.. நடுராத்திரியில் நடந்த சினிமா பாணி வேட்டை..!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

இருப்பினும், அதிகாரிகள் கடலில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, வீசப்பட்ட அந்த 5 மூட்டைகளையும் பத்திரமாக மீட்டனர். அந்த மூட்டைகளைத் திறந்து சோதித்தபோது, அவற்றில் சுமார் 115 கிலோ எடையுள்ள சர்வதேச தரம் வாய்ந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலை முந்த்ரா துறைமுகத்திற்குக் கொண்டு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்திலிருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள அரபிக்கடலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகக் கடலோர காவல் படையினருக்கும், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இரு பிரிவினரும் இணைந்து அரபிக்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பலில் ஏறி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகளைக் கண்டதும் கப்பலில் இருந்த சிலர், 5 மூட்டைகளில் இருந்த போதைப்பொருட்களை வேகமாக கடலில் வீசினர்.