ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்..! எர்ணாகுளம் – சென்னை இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு…!!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

ரெயில்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சேலம் கோட்டத்தின் வழியாக இயக்கப்பட உள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில், இரவு 08.25 மணிக்கு புறப்பட்டு அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக மறுநாள் காலை 05.07 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து காலை 05.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் வழியாக காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை சென்றடையும் .

   

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 02.10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இரவு 07.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இங்கிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை வழியாக மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் பயணிகளின் வசதிக்காக பெரம்பூர் நிலையத்திலும் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.