FLASH: பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு!.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..!!!

By Muthu Mani on வைகாசி 27, 2026

Spread the love

சென்னையில் இன்று (மே 27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ₹108.20-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ₹99.98-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மே மாதத்தில் மட்டும் எரிபொருட்களின் விலை உயருவது இது 6-வது முறையாகும். இந்த தொடர் விலை உயர்வு காரணமாக, சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து, சந்தைகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளதால் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.