தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்திற்குள் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தமிழக முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி MLA சத்யபாமா மற்றும் பெருந்துறை தொகுதி MLA ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் ராஜினாமாவை அடுத்து, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாகக் காலியானதாக அறிவிக்கப்படவுள்ளதால், மாநில அரசியல் களம் தற்போதே இடைத்தேர்தல் சூட்டை எட்டியுள்ளது.
