96 படத்தில் நடித்த நடிகையா  இவர்… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…. அழகான புகைப்படங்கள் உள்ளே….

By Begam

Published on:

நடிகை தேவதர்ஷினி சைத்தன் மகள் நியதி புடவையில் ஒரு அழகான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் பார்த்திபன் கனவு, எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

   

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவர் 96 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது நியதி புடவையில் ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை  நடத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த நடிகையா இவர் ?  என்று கூறி வருகின்றனர்.