காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து போராடிய பதறவைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. காடுகளின் மிகக் கொடூரமான வேட்டை விலங்கான சிங்கம், தன் கூர்மையான நகங்களாலும் பலத்தாலும் எருமைக்குட்டியை எளிதாக வீழ்த்த முயல்கிறது. பொதுவாகவே சிங்கத்தின் வேட்டையிலிருந்து தப்பிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. சிங்கம் ஒரு இரையைக் குறிவைத்துவிட்டால், அது உருவத்தில் பெரிய யானையாகவே இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதைச் சாய்த்துவிடும் வல்லமை கொண்டது. அதனால்தான் சிங்கம் ‘காட்டுக்கே ராஜா’ என்று வர்ணிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்தத் தாக்குதலின் போது தாய் எருமை காட்டிய வீரம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. தன் கண் முன்னே பிறந்த சில நிமிடங்களே ஆன தன் குட்டி மரணத்தின் விளிம்பில் இருப்பதை உணர்ந்த தாய் எருமை, சிங்கத்தின் பலத்தைக் கண்டு அஞ்சாமல் நேருக்கு நேர் மோதியது. தன் கூர்மையான கொம்புகளால் சிங்கத்தைத் தாக்கி, தன் குட்டியை அதன் பிடியிலிருந்து விடுவிக்க இறுதிவரை போராடியது. ஒரு தாயின் பாசத்திற்கும் போராட்டத்திற்கும் முன்னால் சிங்கமாகவே இருந்தாலும் தோற்றுத்தான் ஆக வேண்டும் என்பதை இந்த வீரம் செறிந்த போராட்டம் பறைசாற்றுகிறது.

   

https://www.instagram.com/reel/DXOvkq6AS1C/?utm_source=ig_web_copy_link

   

சமூக வலைத்தளங்களில் காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த விறுவிறுப்பான காணொளி, தாய்மையின் எல்லையற்ற ஆற்றலுக்குச் சான்றாக அமைந்துள்ளது. ஆபத்தான சூழ்நிலையிலும் தப்பியோடாமல், தன் குட்டிக்காகக் காட்டரசனை எதிர்த்து நின்ற தாய் எருமையின் துணிச்சல், பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைப்பதோடு மட்டுமன்றி, இயற்கையின் உன்னதமான தாய் பாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.