அட கடவுளே… கோடை விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் விபத்து.. நதியில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்ற முயன்று.. 2 சிறுவர்கள் உயிரிழந்த கொடூரம்..!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில், கோடை விடுமுறைக்காகத் தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்த அண்ணன், தங்கை இருவர் சர்யு நதியில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. சிக்ரிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (11) மற்றும் அவரது சகோதரி ஷிவானி (13) ஆகிய இருவருமே இந்த விபத்தில் பலியான சிறுவர்கள் ஆவர். பள்ளி விடுமுறையைக் கழிப்பதற்காக மகிழ்ச்சியோடு உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தச் சிறுவர்கள் இருவரும் தங்களது 16 வயது அத்தை மாயாவுடன் கிராமத்திற்கு வெளியே உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். அதன்பின்னர், அவர்கள் அருகில் இருந்த சர்யு நதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் தத்தளித்துள்ளார். தம்பதியைக் காப்பாற்ற முயன்ற ஷிவானியும், பின்னர் இருவரையும் மீட்க ஆற்றில் குதித்த அத்தை மாயாவும் நீரோட்டத்தின் வேகத்தால் நீரில் மூழ்கத் தொடங்கினர்.

   

அவர்களின் அபயக் குரலைக் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் அத்தை மாயா மற்றும் சிறுவன் பிரின்ஸ் ஆகிய இருவரை மக்கள் மீட்டனர். ஆனால், பிரின்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்றொரு சிறுமியான ஷிவானியின் உடல் இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பிறகு நதியிலிருந்து மீட்கப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்ட மாயா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோடை விடுமுறையில் அரங்கேறிய இந்த கோர விபத்து அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.