அதிமுகவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்… காலையில் முன்னாள் எம்பி… மாலையில் முன்னாள் அமைச்சரின் நிழல்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், தற்போது புதுக்கோட்டை மாநகர செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நிழலாகவும், அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வலம் வந்த அப்துல் ரகுமான், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் தன்னுடன் பயணித்தவர்களுக்கும், இந்த பதவியை வழங்கிய தலைமைக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்களது பொறுப்புகளில் இருந்து விலகுவது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.