இனி ஒரு ரூபாய் கூட எக்ஸ்ட்ரா வாங்க முடியாது.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு விழுந்த செம டோஸ்… குடிமகன்களுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்கவும், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும் அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 முதல் ₹30 வரை வசூலிக்கப்படுவதாகப் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் கடைப்பணியாளர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.