தாய் மாமன் என்று சொன்னீங்களே… குழந்தைங்க பாதுகாப்பில் கொஞ்சம் தனிக்கவனம் செலுத்தியிருக்கலாமே… நயினார் நாகேந்திரன் காட்டம்..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு போதிய வேகம் காட்டாததே கோவை சிறுமி கொலை செய்யப்படக் முக்கியக் காரணம் என்று நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குழந்தைகளுக்குத் தான் ஒரு தாய் மாமன் என்று மேடைகளில் கூறும் முதலமைச்சர் விஜய், கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு விவகாரங்களில் தனிக் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய புதிய ஆட்சியிலாவது பாலியல் குற்றங்கள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கோவை சிறுமி கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனக் குரல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.