உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சோமே… CM விஜய்யால் ஏமாற்றம்.. பெண்கள் கண்ணீர்… கோவை சிறுமி கொலை வழக்கில் வெடித்த போராட்டம்.!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

கோவை சிறுமி கொடூரக் கொலை வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என முதலமைச்சர் விஜய்க்குப் பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகப் போராட்டக் களத்தில் ஆவேசமாகப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவர், முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பல்வேறு கண்ணீர் மல்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தங்கள் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முதலமைச்சர் விஜய்யை ஒரு நிஜ ஹீரோவாக நினைத்தே தங்களது வாக்குகளைச் செலுத்திப் பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த ஆட்சியில், பெண்களுக்கு இப்படித் தொடர்ந்து அநீதிகளும் கஷ்டங்களும் நேர்ந்தால் தங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்று அவர் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.