புது டெல்லியின் பட்லா ஹவுஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் தனது அடையாளத்தை மறைத்து, சாதிய ரீதியாக பின்தங்கிய பெண் ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகார் எழுந்துள்ளது. முகமது ஃபஹிம் என்ற அந்த நபர், தன்னை ஒரு இந்துவாகக் காட்டிக்கொண்டு அப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர், சட்டவிரோத ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, அப்பெண்ணை பிணைக் கைதியாக வைத்துக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்துவதற்காக ரத்தத்தில் குளிப்பாட்டுவது, மாமிசத் துண்டுகளை அவர் முன்னால் வீசுவது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டதோடு, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் தலைநகரில் நடந்துள்ள இந்த அச்சுறுத்தலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமது ஃபஹிம் உட்பட நான்கு பேரை டெல்லி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
