விஜய்யின் “அந்த வைராக்கியம்” தான் இன்று CM ஆக்கியிருக்கு… காலம் தான் பதில் சொல்லும்… உண்மையை உடைத்த நண்பன் சஞ்சீவ்..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், த.வெ.க தலைவருமான விஜய் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் முதலமைச்சரின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் போட்டியிடக்கூடும் என்ற யூகங்கள் பரவலாக எழுந்துள்ளன.

இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போதைக்கு தான் அதைப்பற்றி யோசிக்கவில்லை என்றும், தேர்தலில் போட்டியிடுவது என்பது சூழ்நிலையைப் பொறுத்தது, அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றும் நடிகர் சஞ்சீவ் பதிலளித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே ‘முதல்வன் 2’ படம் போல மிக வேகமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறது. விமர்சனங்களை தாண்டி தனது விடாமுயற்சி மற்றும் வைராக்கியத்தால் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக உயர்ந்துள்ளார் என்று அவர் பாராட்டியுள்ளார்.