தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி மற்றும் தென் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொண்டனர்.
இந்த அரசியல் கட்சி தாவல் நிகழ்வு தவெக வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழக அரசின் தலைமைப் பீடமாகவும், பொது நிர்வாக மையமாகவும் விளங்கும் தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே இப்படிப்பட்ட கட்சி மாறும் மற்றும் அரசியல் நிகழ்வை நடத்தியது முறையானதா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி விவாதப் பொருளாக்கி வருகின்றனர்.
