BREAKING: தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் இது ஒரு முக்கியத் திருப்புமுனை முடிவாகக் கருதப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி, விசிக சார்பில் வன்னி அரசு (ஆதிதிராவிடர் நலத்துறை) அமைச்சராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் உள்ள பட்டியலின அமைச்சர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், கூட்டணி ஆட்சி முறையில் விசிக அமைச்சரவையில் பங்கெடுப்பது இதுவே முதல் முறையாகும்.