கட்டிலுக்கு அடியில் ‘பேய்’… அலறிய குழந்தைகள்… காட்டிக் கொடுத்த பந்து… கணவன் இல்லாத நேரத்தில் அம்பலமான மனைவியின் பகீர் கள்ளக்காதல்…!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா (Gonda) பகுதியில், கணவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது மனைவி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்த வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத தைரியத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும் தனியாக இருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் பந்து தவறி வீட்டிற்குள் சென்றுள்ளது.

பந்தைத் தேடி வீட்டிற்குள் வந்த குழந்தைகள், கட்டிலுக்கு அடியில் ஏதோ உருவம் இருப்பதை கவனித்துள்ளனர். அங்கே பதுங்கியிருந்த நபரைக் கண்ட அதிர்ச்சியில், “பேய்… பேய்…” என்று அலறியடித்துக்கொண்டு குழந்தைகள் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அதன் பின்னரே, கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தது பேய் அல்ல, அந்தப் பெண்ணின் கள்ளக்காதலன் தான் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.