BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்த மூடிய அறை கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இக்கூட்டம் முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் கடும் பதற்றமும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.