இளைய தளபதியுடன் ஒரு சூப்பர் செல்பி எடுத்த ரஷ்மிகா மந்தனா…செல்பீ புள்ள … லேட்டஸ்ட் கிளிக் ….

By Begam on புரட்டாதி 14, 2022

Spread the love

இளைய தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜயுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

தளபதி விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷியாம், யோகி பாபு என ஏகப்பட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

   

 

இப்படத்தை பெரும் பொருட் செலவில் தில் ராஜு  தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமாக தற்பொழுது ராஷ்மிகா மந்தனா விஜயுடன் சேர்ந்து செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.