செம டுவிஸ்ட்..!! அரசியலில் இருந்து விலகிய சில மணி நேரங்களில்… உண்மையை போட்டுடைத்த PTR.. அதிர்ச்சியில் அதிமுக திமுக.. மகிழ்ச்சியில் தவெக..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

பொதுவாழ்வில் இருந்து சில காலம் விலகியுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே 35 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் தற்போது நிச்சயமாக ஒரு புதிய யுகத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பி.டி.ஆர், இருதுருவ கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்து, ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். தவெக பெற்ற இந்த மிகப்பெரிய வாக்கு வங்கி, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை அவரது இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.