நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் (PTR) அவர்கள் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து தீவிரமாக மக்கள் பணியாற்றியதால், தற்போது 60 வயதை எட்டியுள்ள நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் காரணமாகவே இந்த தற்காலிக ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
