பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான 85 வயதான கே.ராஜன், சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினரிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எப்போதும் சினிமா மேடைகளில் துணிச்சலாகவும் விறுவிறுப்பாகவும் பேசக்கூடிய அவரது இந்த தீவிர முடிவிற்கான காரணம் குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து தற்கொலையின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
