தமிழகம் முழுவதும் உடனடியாக… பதவி ஏற்ற உடனே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் அவர்கள் தனது அமைச்சரவைக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை உடனடியாகக் கூட்டி, பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டங்களை நிறைவு செய்த பின்னர், அந்தந்த துறைகளின் தற்போதைய கள நிலவரம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கான நற்பணிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தொய்வின்றி, மிக விரைவாகச் செயல்படுத்தி மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு, புதிய அரசின் நிர்வாகப் பணிகளைத் தற்போதே வேகம் எடுக்க வைத்துள்ளது.