அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

By Muthu Mani on வைகாசி 17, 2026

Spread the love

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மேம்பாலம் திறக்கப்பட்ட போதிலும் டிராபிக் குறையாததால், பிரதமர் மோடி வொர்க் ஃபிரம் ஹோம் மற்றும் எரிபொருள் சிக்கன பயன்பாடு போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ORR பகுதியில் உள்ள பெரிய தொழில் பூங்காக்களுக்குள் (Tech Parks) ஊழியர்களின் கார்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு போக்குவரத்து போலீஸ், நகராட்சி அமைப்புகள் மற்றும் வெளி வளைய சாலை நிறுவனங்கள் சங்கம் (ORRCA) ஆகியவை இணைந்து நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. தற்போது எகோஸ்பேஸ், எகோவேர்ல்ட் உள்ளிட்ட பெரிய தொழில் பூங்காக்களில் ஐடி ஊழியர்கள் தங்களது கார்களை இலவசமாக நிறுத்தி வருகின்றனர். இந்த இலவச வசதி தொடர்வதாலேயே பர்சனல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

   

வெளிவட்ட சாலைப் பகுதியில் தினசரி 8 முதல் 10 லட்சம் பேர் வரை பயணம் செய்யும் நிலையில், பெரும்பாலான கார்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே பயணிப்பது நெரிசலுக்கு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் பார்க்கிங் கட்டண முறை அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு கார்பூலிங், நிறுவன பேருந்துகள், மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும், அதன் மூலம் பர்சனல் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து டிராபிக்கைக் கட்டுப்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் கணிக்கின்றனர்.

   

இருப்பினும், இந்த ஐடியா நடைமுறைக்கு வந்தால் தினசரி காரில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களின் மாதச் செலவு அதிகரித்து, அவர்களின் குடும்ப பட்ஜெட் பெரிதும் பாதிக்கப்படும். ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் நீண்ட பயண நேரத்தால் அவதியுற்று வரும் ஊழியர்கள், இதனைத் தங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையாகவே பார்க்கின்றனர். தற்போது விவாதக் கட்டத்தில் உள்ள இத்திட்டம், ஐடி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.