35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு ஒட்டுமொத்த கிராமத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக ரகசியக் காதல் உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வயது வித்தியாசம் ஒரு தடையாக இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாள் இரவு அந்தப் பெண் தன் குடும்பத்தினருக்குத் தெரியாமல், வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது காதலனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. நள்ளிரவில் பெண் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.
இறுதியில், கரும்புத் தோட்டத்தில் அந்த இளைஞனுடன் அவர் தனியாக இருப்பதை கிராம மக்கள் கண்டுபிடித்து, இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமே ஸ்தம்பித்துப் போனது. கிராம மக்களின் முன்னிலையில் எழுந்த பெரும் பரபரப்பைத் தொடர்ந்து, வேறு வழியின்றி அவர்கள் இருவருக்கும் உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
