நடிகர் ரவி மோகன் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஆர்த்தி தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்த இக்கட்டான சூழ்நிலை காரணமாகவே தான் ஆர்த்தியைத் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரவி மோகனின் இந்த அதிரடித் தகவல் சமூக ஊடகங்களிலும் ஊடக வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
ரவி மோகனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆர்த்தியின் தாயாரும், ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா உடனடியாகவும் ஆவேசமாகவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரவி மோகன் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு பொய் என்று சாடினார். தங்களது குடும்பத்தின் மீது பழி சுமத்துவதற்காகவே ரவி மோகன் திட்டமிட்டு இப்படி ஒரு கதையை ஜோடித்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய சுஜாதா, “யார் உண்மையில் கையை அறுத்துக் கொண்டு திருமணத்திற்கு வற்புறுத்தியது என்பதை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்” என்று ரவி மோகனுக்கு சவால் விடுத்துள்ளார். உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும், சட்டப்படி இதனை எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளால் இவர்களது குடும்பப் பிரச்சினை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
