BREAKING : CBSE மாணவர்களுக்கு அதிரடி மாற்றம்.. ஜூலை 1-ம் தேதி முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டது…!!

By Swetha on வைகாசி 16, 2026

Spread the love

நாட்டின் அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளிலும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

அதே வேளையில், இந்த புதிய கொள்கையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாடச்சுமையைக் குறைக்கும் வகையில் ஒரு முக்கிய சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் அந்த மூன்றாவது மொழிக்கு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.