நெருப்பாய் சுழன்ற பந்து… பாக்கெட்டில் இருந்து வந்த விசித்திர சீட்டு.. ஐபிஎல் 2026-ஐ மிரட்டிய ஆகாஷ் சிங்கின் மாஸ் கொண்டாட்டம்..!!

By Soundarya on வைகாசி 16, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்து, அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, நடப்பு சீசனில் தனது முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் பெற்றார். லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் களமிறங்கிய அவர், பவர்ப்ளே ஓவர்களிலேயே அதிரடியாக பந்துவீசி அணியில் தனது தாக்கத்தை உடனே ஏற்படுத்தினார்.

ஆகாஷ் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை முதலில் வீழ்த்தினார். அந்த விக்கெட்டை வீழ்த்தியவுடன், அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய துண்டுச் சீட்டை (Note) எடுத்து காட்டி மிகவும் விசித்திரமான முறையில் கொண்டாடினார். அந்த சீட்டில், “#அக்கி ஆன் ஃபயர் – டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்று ஆகாஷுக்குத் தெரியும்” (Akki on fire – Akash knows how to take wickets in T20 game) என்று எழுதப்பட்டிருந்தது.

   

ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சனின் விக்கெட்டையும் ஆகாஷ் சிங் கைப்பற்றினார். அப்போதும் அவர் அதே பாணியில் தனது பாக்கெட்டில் இருந்து அந்த துண்டுச் சீட்டை எடுத்து காட்டி தனது விக்கெட் கொண்டாட்டத்தை மீண்டும் நிகழ்த்தினார். முன்னதாக ஊர்வில் படேல் மற்றும் ரகு சர்மா போன்ற வீரர்கள் இது போன்ற வித்தியாசமான கொண்டாட்டங்களைச் செய்திருந்த நிலையில், தற்போது ஆகாஷ் சிங்கும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.