“மெட்ராஸின் எப்ஸ்டீன்” என்னிடம் அத்துமீறிய இசையமைப்பாளர் பெயரை வெளியிடுவேன்… பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

By Soundarya on வைகாசி 15, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இசையமைப்பாளரின் ஸ்டூடியோவிற்குச் சென்றபோது தமக்குக் கடுமையான பாலியல் அத்துமீறல்களும், மன ரீதியான துன்புறுத்தல்களும் அரங்கேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நபர் ஸ்டூடியோவிற்குள் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பல பெண்களைத் தவறாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும், இந்த விவகாரங்கள் அனைத்தும் அவரது மனைவிக்கும் தெரிந்தே இருப்பதாகவும் கூறி அவரை “மெட்ராஸின் எப்ஸ்டீன்” என சாடியுள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நேர்ந்த கொடுமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தாம் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷிற்குச் சென்றதாகக் கூறியுள்ள ஸ்வாகதா, தற்போதும் அந்த நபர் பல பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி வருவதால் சட்டப்படி போராடத் துணிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அந்த நபர் யார் என்று கணித்துக் கூறி வரும் நிலையில், அவதூறு வழக்குக்கான செலவை ஏற்பதாக இருந்தால் அந்த இசையமைப்பாளரின் பெயரை பகிரங்கமாக அறிவிக்கத் தயாராக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்கவே தாம் சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதால் வீணான அவதூறு வழக்குகளில் சிக்கித் தனது சட்டப் போராட்டத்தை முடக்க விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.