பரபரப்பு.! தவெக ஆட்சி கவிழலாம்… 2029-ல் முன்கூட்டியே தேர்தல்.. தயாரா இருங்க.. பகீர் கிளப்பிய ஸ்டாலின்..!!

By Soundarya on வைகாசி 15, 2026

Spread the love

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும், எனவே கட்சி நிர்வாகிகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசியல் சூழல்களைக் கூர்ந்து கவனித்து வியூகங்களை வகுக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, தமிழக சட்டமன்றப் பேரவை தேர்தலும் ஒன்றாக வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், தற்போதிருந்தே திமுகவினர் திட்டமிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

சமீபத்திய தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், நமது இந்த பின்னடைவு என்பது தற்காலிகமானது மட்டுமே என்று நிர்வாகிகளுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார். கடந்த காலங்களில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்ற பாரம்பரியம் திமுகவுக்கு உண்டு என்பதை அவர் நினைவூட்டியுள்ளார். இந்த தற்காலிகத் தொய்விலிருந்து மீண்டு, மீண்டும் மக்கள் செல்வாக்குடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.