“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து மருத்துவர் ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உடலில் ஏற்பட்ட கடுமையான வலிக்கு நிவாரணம் தேடி மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடமே அந்த மருத்துவர் தனது காமப் பசியைக் காட்ட முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வந்தபோது, முதலில் அவரைப் பொது வெளியில் வைத்துப் பரிசோதித்த மருத்துவர், கூடுதல் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே இருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சென்றதும் பெண்ணின் உடலை மசாஜ் செய்ய வேண்டும் எனக் கூறி, அவரது ஆடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தபோது, “இங்கு இப்படித்தான் சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறி மருத்துவ நெறிமுறைகளுக்கு மாறாக மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

   

மருத்துவரின் தவறான நோக்கத்தைப் புரிந்துகொண்டு அங்கிருந்து தப்பிய அந்தப் பெண், உடனடியாகக் காவல் நிலையத்தில் இந்த அநாகரிகச் செயல் குறித்துப் புகார் அளித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட காமவெறி பிடித்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதமான மருத்துவத் தொழிலில் இருந்துகொண்டு நோயாளியிடம் அத்துமீறிய இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது